
காய்கறி பன்மயத்திற்கு புத்துயிர் அளித்தல் - விதை சேமிப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டி – புத்தகம் வெளியீடு கடந்த 25 அக்டோபர் 2020 அன்று நடைபெற்ற இணைய வழி விதை பன்மய திருவிழாவில் தீபிகா குண்டாஜி அவர்கள் எழுதிய Reviving Vegetable Diversity - A Seed Savers' Guide புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நமது நீடித்த வாழுமைக்கான நிறுவனத்தின் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு திரு. பெர்னார்ட், பெப்பிள் கார்டன் மற்றும் இப்புத்தகத்தின் ஆசிரியர் தீபிகா குண்டாஜி அவர்களால் வெளியிடப்பட்டது. தமிழ் மொழிபெயர்ப்பான காய்கறி பன்மயத்திற்கு புத்துயிர் அளித்தல் - விதை சேமிப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டி புத்தகம் தமிழக விவசாயிகள், விதை சேமிப்பாளர்கள், இயற்கை விவசாய ஆர்வலர்கள், நகர்புற காய்கறி தோட்ட அமைப்பாளர்களிடையே பரவலாக்கும் வகையில் ஆரோவில்லின் SAIIER அமைப்பின் உதவியுடன் பதிப்பிக்கப்பட்டு தற்போது வெளியிடப்படுகிறது. இதற்கான குறைந்த பட்ச நன்கொடை தொகையாக ரூ. 120/- (ஒரு புத்தகத்திற்கு) நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதன் மூலம் வரும் தொகையினை எங்களது பல்வேறு புத்தக வெளியீ...