Posts

Showing posts with the label விதை

"விதை பயங்கரவாதம்" - விதை இறையாண்மை மீதான மற்றுமொரு போர் !?

Image
  கடந்த இருவாரங்களில் விதை குறித்து பகிரப்பட்ட இரண்டு முக்கிய செய்திகள் தேசிய அளவில் ஒரு பேசு பொருளாக ஆனது. பன்னாட்டு நிறுவனங்களும் , அதன் பொருளுதவில் நடைபெறும் ஆய்வுகளும் அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் மரபணு மாற்று விதைகளும் , அதன் பரவல்களும்   நமது விதை பன்மயத்தின் மீதும் , சூழல் சார் மரபு விதைகளின்   பாதுகாப்பிற்கும் ஒரு நேரடி அச்சுறுத்தல் எனில் , இந்திய தேசிய விதை கழகம் ( National Seed Association of India) சமீபத்தில் வெளியிட்டுள்ள வெளியில் இருந்து ஊடுருவும் விதை பயங்கரவாதம் குறித்த எச்சரிக்கை மற்றுமொரு மறைமுக தாக்குதல் ஆகும்.   தி ஹிந்து பிசினஸ்லைன் தனது இணைய நாளிதழில் கடந்த ஆகஸ்ட் 3, 2020 வெளியிட்டுள்ள   NSAI asks Centre to watch out for Chinese 'seed terrorism' கட்டுரையில் சர்வதேச விதை பரிசோதனை அமைப்பின் ( International Seed Testing Association – ISTA) எச்சரிக்கையின் அடிப்படையில் சீனவில் இருந்து இந்திய சந்தைகளில் ஊடுருவி உள்ள சந்தேகத்திற்குரிய விதைகள் குறித்த எச்சரிக்கையினை மத்திய அரசுக்கு NSAI தெரிவித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. Ref:  ht...