காய்கறி பன்மயத்திற்கு புத்துயிர் அளித்தல் - விதை சேமிப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டி – புத்தகம் வெளியீடு
கடந்த 25 அக்டோபர் 2020 அன்று நடைபெற்ற இணைய வழி விதை பன்மய திருவிழாவில் தீபிகா குண்டாஜி அவர்கள் எழுதிய Reviving Vegetable Diversity - A Seed Savers' Guide புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நமது நீடித்த வாழுமைக்கான நிறுவனத்தின் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு திரு. பெர்னார்ட், பெப்பிள் கார்டன் மற்றும் இப்புத்தகத்தின் ஆசிரியர் தீபிகா குண்டாஜி அவர்களால் வெளியிடப்பட்டது.
தமிழ் மொழிபெயர்ப்பான காய்கறி பன்மயத்திற்கு புத்துயிர் அளித்தல் - விதை சேமிப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டி புத்தகம் தமிழக விவசாயிகள், விதை சேமிப்பாளர்கள், இயற்கை விவசாய ஆர்வலர்கள், நகர்புற காய்கறி தோட்ட அமைப்பாளர்களிடையே பரவலாக்கும் வகையில் ஆரோவில்லின் SAIIER அமைப்பின் உதவியுடன் பதிப்பிக்கப்பட்டு தற்போது வெளியிடப்படுகிறது. இதற்கான குறைந்த பட்ச நன்கொடை தொகையாக ரூ. 120/- (ஒரு புத்தகத்திற்கு) நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதன் மூலம் வரும் தொகையினை எங்களது பல்வேறு புத்தக வெளியீட்டிற்கு பயன்படுத்தும் நோக்கில் நன்கொடை தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தினை பெற விரும்புவோர் எங்களது நீடித்த வாழுமைக்கான நிறுவனம், நாயக்கர் இல்லம், கோட்டக்கரை, ஆரோவில் அலுவலகத்தில் நேரிடையாக வந்து பெற்றுக்கொள்ளலாம்.
இப்புத்தகத்தினை தபாலில் பெற விரும்பினால், நன்கொடையுடன் சேர்த்து விரைவு தபாலுக்கான விலையையும் கீழ்காணும் வங்கி எண்ணுக்கு செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பணம் செலுத்திய ஒரு வாரத்திற்குள் புத்தகம் அனுப்பி வைக்க ஆவண செய்கிறோம்
புத்தகத்தின் பெயர் : காய்கறி பன்மயத்திற்கு புத்துயிர் அளித்தல் - விதை சேமிப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டி (Tamil translation of “Reviving Vegetable Diversity – A seed savers’ guide” by Deepika Kundaji)
வெளியீடு : நீடித்த வழுமைக்கான நிறுவனம், ஆரோவில்
நன்கொடை : ரூ. 120/- (பிரதி ஒன்றுக்கு )
விரைவு தபால் செலவு :
ஒரு புத்தகத்திற்கு - ரூ. 40
இரண்டு / மூன்று புத்தகங்கள் – ரூ. 70
மொத்த எண்ணிக்கையில் பெற cesa@tnavsli.in -க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
வங்கி எண் விபரம்
Account holder: Sangamam trust
Account Number: 6935934300 CURRENT A\C
Bank: Indian Bank
Branch: Tiruchitrambalam Branch
RTGS\NEFT: IDIB000T070
MICR Code: 605019010
புத்தகத்தினை தபாலில் பெற விரும்புவோர் மேல் தரப்பட்டுள்ள வங்கி கணக்கில் புத்தக நன்கொடை மற்றும் தபால் செலவுடன் சேர்த்து செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வங்கியில் பணம் செலுத்திய விபரங்களுடன் (e-receipt / picture of the receipt) தங்களது
பெயர் :
கைபேசி எண்:
முழு முகவரி :
ஆகியவற்றை 86670 47775 எண்ணிற்கு Whatsapp அல்லது cesa@tnavsli.in -க்கு மின்னஞ்சல் அனுப்பி உறுதி செய்துகொள்ளவும்.
Comments
Post a Comment