Posts

Image
  காய்கறி பன்மயத்திற்கு புத்துயிர் அளித்தல் - விதை சேமிப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டி – புத்தகம் வெளியீடு கடந்த 25 அக்டோபர் 2020 அன்று நடைபெற்ற இணைய வழி விதை பன்மய திருவிழாவில் தீபிகா குண்டாஜி அவர்கள் எழுதிய Reviving Vegetable Diversity - A Seed Savers' Guide புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நமது நீடித்த வாழுமைக்கான நிறுவனத்தின் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு திரு. பெர்னார்ட், பெப்பிள் கார்டன் மற்றும் இப்புத்தகத்தின் ஆசிரியர் தீபிகா குண்டாஜி அவர்களால் வெளியிடப்பட்டது. தமிழ் மொழிபெயர்ப்பான காய்கறி பன்மயத்திற்கு புத்துயிர் அளித்தல் - விதை சேமிப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டி புத்தகம் தமிழக விவசாயிகள், விதை சேமிப்பாளர்கள், இயற்கை விவசாய ஆர்வலர்கள், நகர்புற காய்கறி தோட்ட அமைப்பாளர்களிடையே பரவலாக்கும் வகையில் ஆரோவில்லின் SAIIER அமைப்பின் உதவியுடன் பதிப்பிக்கப்பட்டு தற்போது வெளியிடப்படுகிறது. இதற்கான குறைந்த பட்ச நன்கொடை தொகையாக ரூ. 120/- (ஒரு புத்தகத்திற்கு) நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதன் மூலம் வரும் தொகையினை எங்களது பல்வேறு புத்தக வெளியீ...

மர்ம விதைகள்... அதிர்ச்சியில் அமெரிக்கா உஷார் இந்தியா - பசுமை விகடன் கட்டுரை

Image
கடந்த வலைபதிவில் விதைபயங்கரவாதம் குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தோம். அது குறித்த  ஒரு கட்டுரை பசுமை விகடனின் தற்போதைய பதிப்பில் வெளிவந்துள்ளது. அதன் சுட்டி கிழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு  https://www.vikatan.com/government-and-politics/agriculture/mysterious-seeds-raise-suspicions-in-america மர்ம விதைகள்... அதிர்ச்சியில் அமெரிக்கா உஷார் இந்தியா! துரை.நாகராஜன் விதை விதை பிரீமியம் ஸ்டோரி அ ண்மையில் உலகின் பல நாடுகளுக்கு பார்சல்களில் மர்ம விதைகள் வந்து கொண்டிருக் கின்றன. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகமான பார்சல்கள் வந்துள்ளன. இதைப்பற்றி அமெரிக்க வேளாண் அமைச்சகம், “இவ்விதைகள் பற்றிய விவரங்கள் முழுமையாக இல்லை. விவசாயத்தை அழிக்கக்கூடிய உயிரி ஆயுதமாகக்கூட இவ்விதைகள் இருக்கலாம். புதிய வகையான நோய்களைப் பரப்பக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுற்றுச்சூழல், விவசாயம் ஆகியவற்றுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தி தேசிய பாதுகாப்புக்குப் பெரிய அச்சுறுத்தலாக மாறும் வாய்ப்புகள் உண்டு” என்று தனது கருத்த...

"விதை பயங்கரவாதம்" - விதை இறையாண்மை மீதான மற்றுமொரு போர் !?

Image
  கடந்த இருவாரங்களில் விதை குறித்து பகிரப்பட்ட இரண்டு முக்கிய செய்திகள் தேசிய அளவில் ஒரு பேசு பொருளாக ஆனது. பன்னாட்டு நிறுவனங்களும் , அதன் பொருளுதவில் நடைபெறும் ஆய்வுகளும் அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் மரபணு மாற்று விதைகளும் , அதன் பரவல்களும்   நமது விதை பன்மயத்தின் மீதும் , சூழல் சார் மரபு விதைகளின்   பாதுகாப்பிற்கும் ஒரு நேரடி அச்சுறுத்தல் எனில் , இந்திய தேசிய விதை கழகம் ( National Seed Association of India) சமீபத்தில் வெளியிட்டுள்ள வெளியில் இருந்து ஊடுருவும் விதை பயங்கரவாதம் குறித்த எச்சரிக்கை மற்றுமொரு மறைமுக தாக்குதல் ஆகும்.   தி ஹிந்து பிசினஸ்லைன் தனது இணைய நாளிதழில் கடந்த ஆகஸ்ட் 3, 2020 வெளியிட்டுள்ள   NSAI asks Centre to watch out for Chinese 'seed terrorism' கட்டுரையில் சர்வதேச விதை பரிசோதனை அமைப்பின் ( International Seed Testing Association – ISTA) எச்சரிக்கையின் அடிப்படையில் சீனவில் இருந்து இந்திய சந்தைகளில் ஊடுருவி உள்ள சந்தேகத்திற்குரிய விதைகள் குறித்த எச்சரிக்கையினை மத்திய அரசுக்கு NSAI தெரிவித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. Ref:  ht...